செய்திகள்
மேற்கு வங்காள சட்டசபை (கோப்புப்படம்

மேற்கு வங்காள சட்டசபையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-01-28 11:45 GMT   |   Update On 2021-01-28 11:45 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக நிறைவேற்றியது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களும், சில மற்ற மாநிலங்களும் இந்தத மசோதனை ஆதரிக்கின்றன. ஆனால் கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது.

கேரளா அரசு மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிரான தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்து அதை நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில அரசும் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்தது. பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு போதுமான ஆதரவு இருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News