செய்திகள்
கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2021-01-27 19:19 GMT   |   Update On 2021-01-27 19:19 GMT
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மந்திரி சபைக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
புதுடெல்லி:

நடப்பு ஆண்டு (2021) கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன்படி, சராசரி தரம் வாய்ந்த கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.375-ம், முழு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.300-ம் அதிகரித்து இருக்கிறது.

இந்த விலை அதிகரிப்பால் சராசரி கொப்பரை தேங்காய்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை இனி குவிண்டாலுக்கு ரூ.10,335 ஆகவும், முழு கொப்பரை தேங்காய்களின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.10,600 ஆகவும் இருக்கும்.

இது விவசாயிகளுக்கு 50 சதவீத லாபத்தை உறுதி செய்யும் என்றும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானது என்றும் வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 4 ஆயிரத்து 896 விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 53.34 டன் முழு கொப்பரையும், 35.58 டன் காய்ந்த கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.
Tags:    

Similar News