செய்திகள்
சுகாதார அமைச்சர் சுதாகர்

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி- சுகாதார அமைச்சர் தகவல்

Published On 2021-01-08 18:26 GMT   |   Update On 2021-01-08 18:26 GMT
கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 124 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் மாநிலத்திற்கு ஒன்றிரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் வரப்போகிறது. திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:-

கர்நாடகாவுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக 13,90,000 தடுப்பூசி டோஸ்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கர்நாடகாவிற்கு வரும். திங்கள்கிழமை முதல் (ஜனவரி 11 ) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தி என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News