செய்திகள்
பிரதமர் மோடி

தாகூர் கண்ட கனவை நனவாக்குவதற்கான ஆற்றலை அளிக்கிறது விஸ்வ பாரதி பல்கலை. - பிரதமர் மோடி

Published On 2020-12-24 21:39 GMT   |   Update On 2020-12-24 22:09 GMT
மேற்கு வங்காளத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
புதுடெல்லி:

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றினார். இதில் மேற்கு வங்க ஆளுநர் மற்றும் மத்திய கல்வி மந்திரி உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் நூற்றாண்டை கொண்டாடுவது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். விஸ்வ பாரதியிலிருந்து வெளிவரும் செய்தியை நம் நாடு உலகம் முழுவதும் பரப்புகிறது.

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை, தொலைநோக்கு, மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாக விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது இந்தியாவுக்கு ஒருவிதமான போற்றத்தக்க இடம். குருதேவ் கண்ட கனவை நனவாக்க, இது நாட்டுக்கு தொடர்ச்சியான ஆற்றலை அளிக்கிறது.

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகை இன்று இந்தியா வழிநடத்துகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளை அடைய சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடு இந்தியா என தெரிவித்தார்.

விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921-ம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News