செய்திகள்
மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற சுஷில்குமார் மோடி

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சுஷில்குமார் மோடி

Published On 2020-12-12 20:19 GMT   |   Update On 2020-12-12 20:19 GMT
பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான சுஷில்குமார் மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:

பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த லோக் ஜனசக்தி நிறுவனர் ராம் விலாஸ் பஸ்வான் மரணம் அடைந்தததை அடுத்து காலியாக இருந்த, அவரது இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய ஒரே வேட்பாளரான ஷியாம் நந்தன் பிரசாத்தின் வேட்பு மனு பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுஷில்குமார் மோடி போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான சுஷில்குமார் மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் உத்தர பிரதேசத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட அருண் சிங் மற்றும் சீமா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். 
Tags:    

Similar News