செய்திகள்
பிரதமர் மோடி குறிப்பிட்ட விவசாயி ஜிதேந்திர போயிஜி

புதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி

Published On 2020-11-29 06:59 GMT   |   Update On 2020-11-29 06:59 GMT
புதிய சட்டங்களை விவசாயிகள் எப்படி பயன்படுத்தி நன்மை அடையலாம் என்பதை ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி விளக்கினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் 71வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் பாராளுமன்றம் சமீபத்தில் வேளாண் சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளன.

இந்த சமயத்தில் மகாராஷ்டிராவின் துலே நகரில் உள்ள விவசாயி ஜிதேந்திர போயிஜி, இந்த புதிய வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மக்காச்சோளம் உற்பத்தி செய்த அவர், அதை வர்த்தகர்களுக்கு சரியான விலையில் விற்க முடிவு செய்தார். 

கொள்முதல் செய்வதற்கு ஒப்புக்கொண்ட மொத்த தொகை சுமார் ரூ.3.32 லட்சம். அட்வான்சாக ரூ.25,000 பெற்றார். மீதமுள்ள தொகை 15 நாட்களில் வழங்கப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. புதிய சட்டத்தின் கீழ், 3 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டியது கட்டாயமாகும். கட்டணம் செலுத்தவில்லை என்றால், விவசாயி புகார் அளிக்கலாம். அவர் புகார் அளித்தார். சில நாட்களுக்குள் தனது நிலுவைத் தொகையைப் பெற்றார். எந்தத் துறையாக இருந்தாலும், சரியான அறிவு அனைவருக்கும் கூடுதல் பலமாக இருக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News