செய்திகள்
மணிஷ் சிசோடியா

பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பே இல்லை: டெல்லி துணை முதல்வர் சிசோடியா

Published On 2020-11-24 17:28 GMT   |   Update On 2020-11-24 17:28 GMT
டெல்லியில் விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என அம்மாநில துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் நாடு தழுவிய அளவில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. என்றாலும் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ -மாணவிகளுக்குத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா 2-ம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 3-ம் அலை வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று அம்மாநில துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிசோடியா கூறுகையில் ‘‘பள்ளிகள் கூடிய விரைவில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என உறுதி அளிக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. அவர்கள் இந்த நேரத்தில் குழந்தைகளில் ஆரோக்கியத்தும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார். 
Tags:    

Similar News