செய்திகள்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்

யுபிஐ பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 2 பில்லியனை தாண்டியது

Published On 2020-11-02 06:38 GMT   |   Update On 2020-11-02 06:38 GMT
யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அக்டோபர் மாதம் 2 பில்லியனை தாண்டி உள்ளது.
புதுடெல்லி:

ஊரடங்கு காலத்தின்போது, நாடு முழுவதும் மின்னணு பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. பரிவர்த்தனை செய்யும் பணத்தின் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அக்டோபர் மாதம் 2 பில்லியனை தாண்டி உள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரிவர்த்தனை எண்ணிக்கை 1.14 பில்லியனாக இருந்தது. அது 80 சதவீதம் உயர்ந்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரிவர்த்தனை எண்ணிக்கை 2.07 பில்லியனாக உள்ளது. இதேபோல் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையும் ரூ.1,91,359.94 கோடியிலிருந்து 101% உயர்ந்து ரூ.3,86,106.74 கோடியாக உள்ளது என அமிதாப் காந்த் கூறி உள்ளார்.
Tags:    

Similar News