செய்திகள்
குமாரசாமி

ரூ.25 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன்: குமாரசாமி பேச்சு

Published On 2020-10-30 02:17 GMT   |   Update On 2020-10-30 02:17 GMT
காங்கிரசார் கொடுத்த இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயிகளின் நலனை காக்க ரூ.25 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, கிருஷ்ணா அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டேன். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. வந்து, உங்களை சந்திக்க எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று கோபப்பட்டு 12 கடிதங்களை என்னிடம் வழங்கினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மாநிலத்தின் நலனை விட சொந்த நலன் தான் முக்கியம். காங்கிரசார் கொடுத்த இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயிகளின் நலனை காக்க ரூ.25 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன்.

மாநிலத்தின் நலனுக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த தொந்தரவை சகித்துக்கொண்டேன். முதல்-மந்திரி ஒருவர் பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில் காங்கிரசார் என்னை வைத்திருந்தனர். எச்.ஏ.எல். நிறுவனத்தை விற்பனை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதானிக்கு 6 விமான நிலையங்களை கொடுத்துள்ளார். பெங்களூருவில் மென்பொருள் துறை வளர்ச்சி அடைய காரணமே தேவேகவுடா தான்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Tags:    

Similar News