செய்திகள்
கட்சியில் இணைந்த ராகுல் லோதியை வரவேற்ற சவுகான்

பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

Published On 2020-10-25 07:25 GMT   |   Update On 2020-10-25 07:25 GMT
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் லோதி இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் லோதி இன்று திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, இடைக்கால சபாநாயகர் ரமேஷ்வர் சர்மாவிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை ராகுல் லோதி சந்தித்தார். அவர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். ராகுல் லோதிக்கு சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார் சவுகான். 
Tags:    

Similar News