செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதத்தில் இந்தியா முன்னிலை - பிரதமர் மோடி பேச்சு

Published On 2020-10-19 17:11 GMT   |   Update On 2020-10-19 17:11 GMT
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சுகாதாரம் மற்றும் வளர்ச்சியில் இருக்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச கூட்டுறவை மேம்படுத்த கிரான்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. 

2020 ம் ஆண்டுக்கான கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் இன்று முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் துவக்கநிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

’உலகத்துக்காக இந்தியா’ என்னும் தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்த கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கும் கொரோனா சவால்களை எதிர்கொள்வதற்கும் தேவைப்படும் முக்கிய முன்னுரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தொடரில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களால் வருங்காலம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இதை குறுகிய காலத்திற்குள் கட்டமைக்கமுடியாது.

ஒருவர் முன்கூட்டியே அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் சரியான நேரத்தில் பலன்களைப் பெற முடியும்.

இந்த ஆண்டுக்கான கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் இந்தியாவில் நேரடியாக நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலை காரணமாக கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெறுகிறது. இதுதான் தொழில்நுட்பத்தின் சக்தி. உலகலாவிய பெருந்தோற்றும் அதை தடுக்கமுடியவில்லை. 

இந்தியாவில் நாங்கள் மிகவும் வலிமையான அறிவியல் விஞ்ஞானிகள் சமூகத்தை கொண்டுள்ளோம். நாங்கள் மிகவும் நல்ல அறிவியல் நிறுவனங்களையும் கொண்டுள்ளோம். குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 88% என்ற அளவில் உள்ளது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய ஊரடங்கை இந்தியா அமல்படுத்தியது தான் இதற்கு காரணம்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

என பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News