செய்திகள்
கோப்பு படம்

கேரளாவை விடாது துரத்தும் கொரோனா - இன்று 8 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக தொற்று

Published On 2020-10-04 13:53 GMT   |   Update On 2020-10-04 13:53 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது அதி வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 851 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை
836 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News