செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதாக வைரலாகும் தகவல்

Published On 2020-09-29 05:10 GMT   |   Update On 2020-09-29 05:10 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழியில் மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை எதிர்க்கும் வழக்கம் சமீப காலங்களில் அதகிரக்க துவங்கி உள்ளது. திமுக எம்பி கனிமொழிக்கு இந்தி தெரியாததால், நீங்கள் இந்தியரா என சென்னை விமான நிலைய அதிகாரி கேட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் குறிக்கோள் வாய்மையே வெல்லும் என இருந்தது. தற்சமயம் இது சத்யமேவ ஜெயதே என மாற்றப்பட்டுள்ளது என வைரல் தவல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், சென்னை உயர்நீதிமன்றத்தின் குறிக்கோள் மாற்றப்படவே இல்லை என தெரியவந்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் எதிலும், குறிக்கோள் சத்யமேவ ஜெயதே என மாற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.

பெரும்பாலான அரசு வலைதளங்களில் வாய்மையே வெல்லும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. அந்த வகையில், வைரல் பதிவுகளில் உள்ளது போன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்படவில்லை என்பது உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News