செய்திகள்
மன்மோகன் சிங்

சோனியா முன்னிலையில் மன்மோகன் சிங்கிற்கு அப்படி நடந்ததாக வைரலாகும் வீடியோ

Published On 2020-09-28 05:10 GMT   |   Update On 2020-09-28 05:10 GMT
சோனியா காந்தி முன்னிலையில் மன்மோகன் சிங்கிற்கு இப்படி நடந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்ச்சி ஒன்றில் சோனியா காந்தி முன்னிலையில் இருக்கை மாற்றி அமர வைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 26 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இவரது வாழ்த்து ட்வீட்டிற்கு பதில் அனுப்பிய ஒருவர் மன்மோகன் சிங் இருக்கை மாற்றி அமர வைக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இணைத்திருக்கிறார்.

11 வினாடிகள் ஓடும் வீடியோவில், இரு அதிகாரிகள் மன்மோகன் சிங் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுப்பி மற்றொரு இருக்கையில் அமர சொல்கின்றனர். வீடியோவில் மன்மோகன் சிங்கின் பின் சோனியா காந்து நின்று கொண்டிருக்கிறார். 



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் சோனி காந்தி மற்றும் மன்மோகன் சிங் இருவரும் அவரவர் இருக்கைகளை மாற்றி அமர்ந்தனர். 

பின் பாதுகாப்பு காரணங்களுக்காக மன்மோகன் சிங் இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்டார். இது பிரதமரின் பாதுகாப்பு வழிமுறைகளின் காரணமாக நடைபெற்ற சம்பவம் ஆகும். அந்த வகையில், வைரல் வீடியோவுடன் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News