செய்திகள்
பிரதமர் மோடி

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Published On 2020-09-27 05:52 GMT   |   Update On 2020-09-27 07:11 GMT
பிரதமர் மோடி மன் கி பாத் உரையில், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில்  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 

இதில், பிரதமர் மோடி பேசுகையில், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையைப் பற்றி பேசினார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்றார் மோடி. 

தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருவதாகவும், கதை சொல்வது ஒரு அற்புதமான கலை என்றும் அவர் குறிப்பிட்டார். பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News