செய்திகள்
ராஜ்தாக்கரே

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேக்கு ரூ.1,000 அபராதம்

Published On 2020-09-22 03:08 GMT   |   Update On 2020-09-22 03:08 GMT
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முக கவசம் அணியாத மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் அதிரடி அரசியலில் ஈடுபடுபவர் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே. இவர் மும்பையில் இருந்து ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே உள்ள மந்த்வாவுக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்தார். அப்போது அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முக கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ராஜ்தாக்கரேக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ராஜ்தாக்கரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். ஆனால் அரசியலில் இருவரும் எதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மும்பையில் இருந்து மந்த்வாவுக்கு சுற்றுலா மற்றும் சாலைவழி போக்குவரத்தை தவிர்க்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதில் பயணிப்பவர்கள் தங்களுடன் கார், இருசக்கர வாகனங்களை ஏற்றிச்செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News