செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- கர்ப்பிணி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.