செய்திகள்
ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-09-09 16:34 GMT   |   Update On 2020-09-09 16:34 GMT
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி மாளிகையில் உள்ள கோர்கா ரைபிள்ஸ் படை வீரர்களுக்கான விடுதியில் நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்த தேக் பகதூர் தபா (40), என்பவர் ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், கோர்கா ரைபிள்ஸ் படையினருக்கான விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடும் முதுகு வலியும், உயர் ரத்த அழுத்தமும் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புதுடெல்லி காவல் உதவி ஆணையர் தீபக் யாதவ்  தெரிவித்துள்ளளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சகவீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News