செய்திகள்
சீனா, இந்தியா

அருணாசல பிரதேசத்தில் 5 பேர் கடத்தல் - சீன ராணுவத்திடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2020-09-06 23:38 GMT   |   Update On 2020-09-06 23:38 GMT
அருணாசல பிரதேசத்தில் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சீன ராணுவத்திடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுடெல்லி:

அருணாசல பிரதேசத்தின் மேல்சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் வேட்டைக்கு சென்ற 7 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றது. அதில் 2 பேர் தப்பி வந்து நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்டு தருமாறு அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பு படையினருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேல்சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை சீன ராணுவத்திடம் இந்திய ராணுவ அதிகாரிகள் எடுத்துக்கூறியுள்ளனர். இது தொடர்பாக எல்லையோர சீன படைகளுக்கு ஹாட்லைன் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும், அவர்களது பதிலுக்கு காத்திருப்பதாகவும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் இரு நாடுகளும் படைகளை குவித்து, பதற்றம் நிலவி வரும் சூழலில் நடந்திருக்கும் இந்த கடத்தல் சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
Tags:    

Similar News