செய்திகள்
சரத்பவார்

இந்திய துணை கண்டத்தை சீனா சுற்றி வளைக்கிறது - சரத்பவார் எச்சரிக்கை

Published On 2020-09-03 19:26 GMT   |   Update On 2020-09-03 19:26 GMT
எல்லா திசைகளில் இருந்தும் சீனா இந்திய துணை கண்டத்தை மறைமுகமாக சுற்றி வளைக்கிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை:

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

எல்லா திசைகளில் இருந்தும் சீனா இந்திய துணை கண்டத்தை மறைமுகமாக சுற்றி வளைக்கிறது. இதன் பின்னால் உள்ள உண்மை குறித்து நான் கட்சியினரிடம் விவரித்து பேசினேன். தென் சீன கடல் பகுதியில் அவர்களின் நடமாட்டம் குறித்து கவலையை வெளிப்படுத்தினேன். பொது விவகாரங்களில் சீன தலையீடு மற்றும் இலங்கை, நேபாளம் உறவையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என கூறினேன். இந்திய- சீன உறவு வரலாறு குறித்து விஜய் கோகலே பேசினார்.

இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார். முன்னதாக சரத்பவார் தனது கட்சி எம்.பி.க்களுடன் லடாக் விவகாரம் குறித்து ஆலோசித்தார். இதில் முன்னாள் வெளியுறவு துறை அதிகாரியும் பங்கேற்றார்.
Tags:    

Similar News