செய்திகள்
கொரோனா உயிரிழப்பு புள்ளிவிவரம்

கொரோனா- மொத்த உயிரிழப்பில் 5 மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம்

Published On 2020-09-03 10:36 GMT   |   Update On 2020-09-03 10:36 GMT
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று வெளியிட்டார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67376 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,70,492 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 68584 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,15,538 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தவர்களில் 70 சதவீதம் பேர், ஆந்திரா,  டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 62 சதவீதம்பேர் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆந்திராவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் வாரந்தோறும் 13.7 சதவீதம் குறைந்துள்ளது. கர்நாடகாவில் 16.1 சதவீதமும், மகாராஷ்டிராவில் 6.8 சதவீதமும், தமிழ்நாட்டில் 23.9 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 17.1 சதவீதமும் குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 29.70 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இது தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட 3.5 மடங்கு அதிகம் ஆகும். இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக நேற்று மட்டும் 68,584 பேர் குணமடைந்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News