செய்திகள்
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழி டோக்ரி, காஷ்மீரி, இந்தி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2020-09-02 10:23 GMT   |   Update On 2020-09-02 10:23 GMT
ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழிகள் மசோதா 2020-ஐ பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக டோக்ரி, காஷ்மீரி, உருது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நிண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இதேபோல் வெளிநாடுகளுடனான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்று, ஜவுளித்துறைக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையிலான தர மதிப்பீட்டு முறை தொடர்பான ஒப்பந்தம். இரண்டாவது, சுரங்கத்துறை பின்லாந்து இடையிலான ஒப்பந்தம், மூன்றாவது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை-டென்மார்க் இடையிலான ஒப்பந்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்திற்கும் (மிஷன் கர்மயோகி) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்மூலம் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை அரசு ஊழியர்கள் கற்றுக்கொள்வதுடன், இந்திய கலாச்சாரத்திலும் உறுதியாக இருப்பார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News