செய்திகள்
ராகுல்காந்தி

மோடி அரசு பொருளாதாரத்தை அழித்ததாக வீடியோ தொடர் வெளியிட ராகுல்காந்தி முடிவு

Published On 2020-08-31 00:22 GMT   |   Update On 2020-08-31 00:22 GMT
பொருளாதாரத்தை மோடி அரசு எப்படி அழித்தது என்பது குறித்து வீடியோ தொடர் வெளியிடப்போவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பொருளாதாரத்தை மோடி அரசு எப்படி அழித்தது என்பது குறித்து வீடியோ தொடர் வெளியிடப்போவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். முதல் வீடியோ இன்று காலை 10 மணிக்கு தனது அனைத்து சமூக வலைத்தள சேனல்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முதலாவது வீடியோவின் டிரெய்லரை நேற்று வெளியிட்டார். அதில், “அமைப்புசாரா பொருளாதாரம் மீது பா.ஜனதா அரசு தாக்குதல் நடத்தி உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யை தவறாக அமல்படுத்தியது, பொது முடக்கம் ஆகியவை அதற்கான உதாரணங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News