செய்திகள்
ம்ழை பாதிப்பை பார்வையிட்ட எடியூரப்பா

கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல் மந்திரி எடியூரப்பா

Published On 2020-08-25 10:24 GMT   |   Update On 2020-08-25 10:24 GMT
கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் நாசமாகி உள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அவர், பெலகாவி சாம்ரா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
 
அதன்பின், ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக பெலகாவி மாவட்டத்தில் மழையால் பாதித்த  பார்வையிட்டார்.

அதன்பின்னர், விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அலமட்டி அணைக்கட்டுக்கு சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தி பாகினா சமர்ப்பணம் செய்தார்.
Tags:    

Similar News