செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் கன மழை - வெள்ளம் கவலையடையச் செய்துள்ளது - தமிழிசை டுவிட்

Published On 2020-08-17 07:13 GMT   |   Update On 2020-08-17 07:13 GMT
தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலையடையச் செய்துள்ளதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில்  கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலையடையச் செய்துள்ளதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களை, என்.டி.ஆர்.எஃப் உள்ளிட்ட மீட்பு படையினர் மீட்டு வருவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட ​​மாவட்டங்களில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள், நிவாரண உதவிகளில் ஈடுபடுமாறு, ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News