செய்திகள்
கோப்புபடம்

ஒரேநாளில் 12,712 பேருக்கு கொரோனா - திகைத்து நின்ற மகாராஷ்டிரா

Published On 2020-08-12 15:53 GMT   |   Update On 2020-08-12 15:53 GMT
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,48,313 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 13,408 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,81,843 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 344 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,650 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை மாநிலத்தில் 1,47,513 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News