செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் 2 கோடியை கடந்த கொரோனா பரிசோதனை

Published On 2020-08-03 23:34 GMT   |   Update On 2020-08-03 23:34 GMT
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 2 கோடியை தாண்டியது. இதுவரை மொத்தம் 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்து 858 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 27 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த மாதம் 6-ந் தேதி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இந்தியாவில் தற்போது 1,348 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் பொதுத்துறையை சேர்ந்த 914 கூடங்களும், தனியாருக்கு சொந்தமான 434 கூடங்களும் அடங்கும்.
Tags:    

Similar News