செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கர்நாடகத்தில் ஒரே நாளில் 98 பேர் பலி - புதிதாக 4,752 பேருக்கு வைரஸ் தொற்று

Published On 2020-08-03 15:43 GMT   |   Update On 2020-08-03 15:43 GMT
கர்நாடகத்தில் ஒரே நாளில் 98 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், புதிதாக 4,752 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் இன்று மேலும் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,571 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 98 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,500 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது வரை 74,469 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு இன்று 4 ஆயிரத்திற்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News