செய்திகள்
பிரதமர் மோடி

தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி

Published On 2020-08-01 12:31 GMT   |   Update On 2020-08-01 12:31 GMT
தாய்மொழியில் கற்பதையே புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
 
புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  

பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களைப் படித்து வருகிறோம். எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை

இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

கடந்த நூற்றாண்டுகளில் சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.

புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். 21-ம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.

அந்தந்த மாணவர்கள் தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News