செய்திகள்
மன உளைச்சலால் - கோப்புப்படம்

கொரோனா தொற்று காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பு - ஆய்வில் அம்பலம்

Published On 2020-07-29 07:12 GMT   |   Update On 2020-07-29 07:12 GMT
கொரோனா தொற்று காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று நோய், 5 மாதங்களுக்கு முன்னர் பரவத்தொடங்கியதால் இந்தியாவில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இப்படி நீண்டதொரு ஊடரங்கு போடப்பட்டதால் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் மக்கள் வேலை இழப்பு, வாழ்வாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையொட்டி ‘ஜி.ஓ.கியூ.ஐ.ஐ’ சுகாதார அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களில் 26 சதவீதத்தினர் லேசான மன உளைச்சலாலும், 11 சதவீதத்தினர் மிதமான மனச்சோர்வாலும், 6 சதவீதம்பேர் தீவிரமான மன உளைச்சலாலும் தவிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

“மன உளைச்சல் அதிகரிக்கிறபோது அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், தற்போது ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறைகள் கடுமையாக மாறி வருகின்றன. இதனால் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சமாளிக்கவும் அவர்கள் தற்போது கற்றுக்கொண்டு வருகின்றனர்” என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News