செய்திகள்
கொரோனா கிட் ராக்கி

சூரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய கொரோனா கிட் ராக்கி கயிறு

Published On 2020-07-28 15:48 GMT   |   Update On 2020-07-28 15:48 GMT
குஜராத் மாநிலம் சூரத்தில்,கொரோனா கால தேவைக்கு ஏற்ப, தயாரிக்கப்பட்ட சானிடைசர், மாஸ்க்குடன் இணைந்த ராக்கி கயிறுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிரித்துள்ளது.
சூரத்:

ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் என்ற விழா சகோதர,  சகோதரி இடையே அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காகச் சகோதரர்  கைகளில் ராக்கி கட்டுவது இந்த விழாவில் முக்கிய பங்காகும்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில்,கொரோனா கால தேவைக்கு ஏற்ப, தயாரிக்கப்பட்ட சானிடைசர், மாஸ்க்குடன் இணைந்த ராக்கி கயிறுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிரித்துள்ளது.

சகோதரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பெரும்பாலான பெண்கள், குறைந்த செலவிலான இந்த புதுமையான ராக்கி கயிறுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா ஹெல்மெட், கொரோனா போண்டா, மாஸ்க் பரோட்டா வரிசையில், இந்த புதுமையான கொரோனா ராக்கி கயிறும் இணைந்துள்ளது. 
Tags:    

Similar News