செய்திகள்
ஆன்லைன் மூலமாக ஆடை வாங்குதல்

ஆன்லைன் மூலமாக ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்

Published On 2020-07-15 05:36 GMT   |   Update On 2020-07-15 05:36 GMT
பெங்களூருவில், ஆன்லைன் மூலமாக ஆடைகள் வாங்க முயன்ற இளம்பெண்ணிடம் இருந்து ரூ.4¼ லட்சத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு தலகட்டபுரா அருகே ரிங்கி டாகோர்(வயது 25) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர், ஆன்லைனில் ஆடைகள் வாங்க முயன்றார். அதற்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தனக்கு பிடித்த ஆடைகளையும் ரிங்கி ஆர்டர் செய்திருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் அந்த ஆடைகள் வராததால் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரிங்கி பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், நீங்கள் ஆர்டர் செய்த விவரங்கள், எந்த வங்கியில் இருந்து பணம் செலுத்தினீர்கள், ஏ.டி.எம். கார்டின் எண் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்பும்படி ரிங்கியிடம் தெரிவித்துள்ளார்.

மர்மநபர் கேட்ட அனைத்து விவரங்களையும் ரிங்கி குறுந்தகவல் மூலம் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய சில நிமிடங்களியே ரிங்கியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர் தனது வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு எண் போன்ற விவரங்கள் மூலம் பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பதை ரிங்கி உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News