செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்

Published On 2020-07-13 22:59 GMT   |   Update On 2020-07-13 22:59 GMT
ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ராணுவ கொள்கை விதிகள் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், இதை எதிர்த்து காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி பி.கே.சவுத்ரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ராணுவ வீரர்கள் குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரத்தில் கஷ்டமான வானிலை, கடினமான நிலப்பரப்பில் பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் குடும்ப இடைவெளியை ஈடுசெய்கிறது. எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று ராணுவ புலனாய்வுத்துறை பொது இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News