செய்திகள்
ராஜ்நாத்சிங்

முப்படை தளபதிகளுடன் லடாக் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு

Published On 2020-07-11 03:36 GMT   |   Update On 2020-07-11 03:40 GMT
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அத்துமீறிய சீன ராணுவம், பேச்சுவார்த்தையை தொடர்ந்து பின்வாங்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக் நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் முப்படை தளபதிகளுடன் விரிவாக ஆய்வு செய்தார்.
புதுடெல்லி :

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அத்துமீறிய சீன ராணுவம், பேச்சுவார்த்தையை தொடர்ந்து பின்வாங்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக் நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று விரிவாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ரவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிங்கர் 4 ஆகிய பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் பரஸ்பரம் பின்வாங்கி வருவது குறித்து ராணுவ தளபதி நரவனே விரிவாக எடுத்துரைத்தார்.

லடாக் பிராந்தியத்தில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் தயார்நிலையில் இருப்பது பற்றியும் நரவனே விளக்கிக்கூறினார். லடாக்கில் மட்டுமின்றி அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களை ஒட்டிய எல்லைக்கோடு பகுதிகளில் தற்போதைய நிலவரம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 4-வது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், படை குறைப்பு நடைமுறைகள் இறுதி செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News