செய்திகள்
முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 7-வது இடத்திற்கு முன்னேற்றம்

Published On 2020-07-10 17:23 GMT   |   Update On 2020-07-10 17:51 GMT
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
போர்ப்ஸ்  உலக பணக்கார பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதித்து இன்றைய நிலவரப்படி 2 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து 70.1 பில்லியன் டாலராக உள்ளது.

இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்து ஆரக்கிள் ஆஃப் ஒமாஹாவின் வார்ரன் பஃப்பெட்டை (68.1 பில்லியன் டாலர்) பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

அமேசான் சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஒரு பங்கு இதுவரை இல்லாத அளவிற்கு 1,884.40 ரூபாயாக அதிகரித்தது. ஆயில்-டூ-டெலிகாம் மூலதனம் 11.90 லட்சம் கோடியாக உயர்ந்தது.

உலகளாவிய முன்னணி முதலீட்டாளர்கள் ஜியோவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதால் பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஜியோ பிளட்பார்ம்ஸ் கடந்த இரண்டு மாதங்களில் 1.17 லட்சம் கோடி திட்டியுள்ளது.
Tags:    

Similar News