செய்திகள்
தீ விபத்தில் கருகிய பொருட்கள்

டெல்லியில் குடோனில் பயங்கர தீ விபத்து- மருத்துவ உபகரணங்கள் கருகின

Published On 2020-07-09 03:54 GMT   |   Update On 2020-07-09 03:54 GMT
டெல்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகின.
புதுடெல்லி:

மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 35 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

குடோனில் எலக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஏராளமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News