செய்திகள்
கொரோனா பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் பலி

Published On 2020-07-07 02:46 GMT   |   Update On 2020-07-07 02:46 GMT
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 1,843 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரில் நேற்று முன்தினம் 1,235 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று சற்று குறைந்து, 981 ஆக வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இது சற்று ஆறுதலை அளித்தாலும், அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளனர். நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,843 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 527 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 680 பேர் அடங்குவர்.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 981 பேர், பல்லாரியில் 99 பேர், உத்தரகன்னடாவில் 81 பேர், பெங்களூரு புறநகர் 68 பேர், தார்வாரில் 56 பேர், கலபுரகியில் 53 பேர், ஹாசனில் 49 பேர், மைசூருவில் 45 பேர், பீதரில் 44 பேர், உடுப்பியில் 40 பேர், மண்டியாவில் 39 பேர், விஜயாப்புராவில் 36 பேர், யாதகிரியில் 35 பேர், தட்சிண கன்னடாவில் 34 பேர், பாகல்கோட்டையில் 33 பேர், துமகூருவில் 31 பேர், சிவமொக்காவில் 24 பேர், கதக்கில் 18 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், ராமநகரில் 11 பேர், கோலாரில் 10 பேர், ஹாவேரியில் 9 பேர், கொப்பலில் 9 பேர், சிக்பள்ளாப்பூரில் 7 பேர், ராய்ச்சூர், சித்ரதுர்காவில் தலா 6 பேர், தாவணகெரேயில் 3 பேர், சிக்கமகளூரு, குடகில் தலா 2 பேர் உள்ளனர். பெலகாவியில் மட்டுமே நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனாவுக்கு நேற்று 30 பேர் பலியாகியுள்ளனர். அதாவது பெங்களூருவை சேர்ந்த 10 பேர், தட்சிண கன்னடாவை சேர்ந்த 2 பேர், தாவணகெரேயில் ஒருவர், பல்லாரியில் ஒருவர், மைசூருவில் 3 பேர், பீதரை சேர்ந்த 8 பேர், துமகூருவை சேர்ந்த ஒருவர், சிக்பள்ளாப்பூர், பாகல்கோட்டை, குடகு, ஹாசனை சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர். இதில் 24 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இதில் 8 பேர் எந்தவித இணை நோயும் இல்லாதவர்கள் ஆவர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 406 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெஙகளூருவில் மட்டும் 156 பேர் அடங்குவர்.

கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 15 ஆயிரத்து 880 மாதிரிகள் அடங்கும். 56 ஆயிரத்து 927 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 385 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 279 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 166 பேர் அடங்குவர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News