செய்திகள்
பிரதமர் மோடி பூஜைகள் தொடர்பான படம்

லடாக்கில் சிந்து பூஜை செய்த பிரதமர் மோடி - புகைப்படங்களை வெளியிட்டார்

Published On 2020-07-05 10:34 GMT   |   Update On 2020-07-05 10:34 GMT
லடாக்கில் சிந்து நதிக்கரையோரம் செய்த இந்த பூஜைகள் தொடர்பான படங்களை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி திடீர் பயணமாக நேற்று முன்தினம் லடாக் சென்றார். அங்கு எல்லைப்பகுதிகளை ஆய்வு செய்த அவர், ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார். மேலும் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.



பிரதமரின் இந்த பயணத்தின்போது லடாக் எல்லையில் அவர் சிந்து பூஜை செய்தார். அங்குள்ள நிமு பகுதியில் சிந்து நதிக்கரையோரம் செய்த இந்த பூஜைகள் தொடர்பான படங்களை நேற்று அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில், ‘நிமுவில் நேற்று (நேற்று முன்தினம்) சிந்து பூஜை செய்தேன். அப்போது நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக வேண்டிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Tags:    

Similar News