செய்திகள்
எல்லை பாதுகாப்பு படை

இந்தியாவில் மேலும் 36 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

Published On 2020-07-05 09:54 GMT   |   Update On 2020-07-05 09:54 GMT
இந்தியாவில் மேலும் 36 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது கொரோனா.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 
மேலும், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 36 பி.எஸ்.எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

தற்போதைய நிலவரப்படி 526 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 817 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News