செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா மருந்து பரிசோதனை - ஐசிஎம்ஆர்

Published On 2020-07-04 12:20 GMT   |   Update On 2020-07-04 12:20 GMT
சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

அவ்வகையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்த COVAXIN என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது.  இந்த பரிசோதனைகளை விரைவில் முடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு ஐசிஎம்ஆர் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்ட நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்   இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. மேலும் விலங்குகள், மனிதர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டே பரிசோதனை செய்யப்படுவதாகவும் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News