செய்திகள்
ராஜேஷ் தோபே

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: ராஜேஷ் தோபே

Published On 2020-07-03 04:34 GMT   |   Update On 2020-07-03 04:34 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை :

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி இங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதிலும் மராட்டியம் மட்டும் சுமார் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டியத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டவில்லை என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா பாதித்த ஒவ்வொருவரையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் மாநில அரசு கண்டறிந்து விடுகிறது. பெரும்பாலான கொரோனா நோயாளிகள் ஏற்கனவே அரசு மையத்தில் வைத்து கண்காணிக்கப்படுபவர்கள் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது மேற்கண்ட இரு தரப்பினருடன் தொடர்பில் இருந்தவர்களாக தான் உள்ளனர். இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக அரசு கண்டறிந்து விடுகிறது. எனவே என்னை பொறுத்தவரை மராட்டியத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News