செய்திகள்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

Published On 2020-06-30 04:49 GMT   |   Update On 2020-06-30 04:49 GMT
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1.69 லட்சம் நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 566840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 18522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16893 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 334822 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 215125 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 90
ஆந்திர பிரதேசம் - 13891
அருணாச்சல பிரதேசம் - 187
அசாம் - 7752
பீகார் - 9640
சண்டிகர் - 435
சத்தீஸ்கர் - 2761
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 203
டெல்லி - 85161
கோவா - 1198
குஜராத் - 31938
அரியானா - 14210
இமாச்சல பிரதேசம் - 942
ஜம்மு - காஷ்மீர்- 7237
ஜார்க்கண்ட் - 2426
கர்நாடகா - 14295
கேரளா - 4189
லடாக் - 964
மத்திய பிரதேசம் - 13370
மகாராஷ்டிரா - 169883
மணிப்பூர் - 1227
மேகாலயா - 47
மிசோரம் - 148
நாகலாந்து - 434
ஒடிசா - 6859
புதுச்சேரி - 619
பஞ்சாப் - 5418
ராஜஸ்தான் - 17660
சிக்கிம் - 88
தமிழ்நாடு - 86224
தெலுங்கானா - 15394
திரிபுரா - 1380
உத்தரகாண்ட் - 2831
உத்தர பிரதேசம் - 22828
மேற்கு வங்காளம் - 17907

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-7004

மொத்தம் - 566840.
Tags:    

Similar News