செய்திகள்
பெட்ரோல் பங்க்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-06-26 04:42 GMT   |   Update On 2020-06-26 04:42 GMT
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம்.


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்தாக கூறப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் வீடியோவில் சிலர் பெட்ரோல் பம்ப் ஒன்றை தாக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பொது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பது போன்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனினும், வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் சமீபத்திய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

உண்மையில் சமீபத்திய பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், வைரல் வீடியோவிற்கும் சமீபத்திய போராட்டங்களுக்கும் தொடர்பில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News