செய்திகள்
டிக்-டாக்

டிக்-டாக்கில் பிரபலமான 16 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-06-25 17:02 GMT   |   Update On 2020-06-25 17:02 GMT
டெல்லியில் டிக்-டாக்கில் 10 லட்சத்திற்கு மேலான பாலோவர்ஸ்களை கொண்டிருந்த 16 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிழக்கு டெல்லி கீதா காலனி பகுதியில் வசித்து வந்தவர் 16 வயது பெண். இவர் டிக்-டாக்கில் வீடியோக்களை பதவிட்டு பிரபலம் ஆனார். இதனால் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்தனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்ந்தனர்.

மேலும் இன்ஸ்டாகிராமிலும் 1.35 லட்சம் பாலோவர்ஸ் வைத்திருந்தார். மிகவும் பிரபலமான இவர் நேற்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை இந்த துக்க காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. உடல் பரிசோதனை செய்தபின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News