செய்திகள்
ரிசர்வ் வங்கி

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வரும்- அவசர சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

Published On 2020-06-24 10:26 GMT   |   Update On 2020-06-24 10:26 GMT
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் இப்போது கொண்டு வரப்படுகின்றன.

1,540 கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்கான முடிவானது, 8.6 கோடிக்கும் அதிகமானோர் இந்த வங்கிகளில் வைத்துள்ள ரூ.4.84 லட்சம் கோடி ரூபாய் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்’ என்றார்.
Tags:    

Similar News