செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்து விட்டது: பட்னாவிஸ் குற்றச்சாட்டு

Published On 2020-06-16 03:47 GMT   |   Update On 2020-06-16 03:47 GMT
மும்பையில் 950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்து விட்டது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மும்பையில் கொரோனாவால் ஏற்பட்ட 950 மரணங்கள் இன்னும் அரசால் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயம். ஆபத்தானதும் கூட. இதில் 500 பேரின் இறப்பு தணிக்கை குழுவுக்குகூட தெரிவிக்கப்படவில்லை. 451 பேரின் இறப்பு தணிக்கை குழுவால் கொரோனா அல்லாத மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மரணங்கள் அனைத்தும் கொரோனாவால் நிகழ்ந்தவை ஆகும். யாருடைய அழுத்தம் காரணமாக அவை கொரோனா அல்லாத மரணங்கள் என அறிவிக்கப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறோம்.

மும்பை மாநகராட்சி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுத்து விட்டது. ஐ.சி.எம்.ஆர்.-இன் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், தணிக்கை குழு ஏன் அந்த மரணங்களை கொரோனா அல்லாத இறப்புகளாக காட்டியது?

தணிக்கை கமிட்டியின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News