செய்திகள்
தேவேகவுடா

மாநிலங்களவை தேர்தல்: தேவேகவுடா உள்பட 4 பேரின் மனுக்கள் ஏற்பு

Published On 2020-06-11 03:30 GMT   |   Update On 2020-06-11 03:30 GMT
மாநிலங்களவை தேர்தலையொட்டி தேவேகவுடா உள்பட 4 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு :

மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா சார்பில் அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும் சங்கமேஸ் நரகுந்து என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.

கர்நாடக சட்டசபை செயலாளரான தேர்தல் அதிகாரி விசாலாட்சி, நேற்று வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார்.

இதில் சுயேச்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தார். மற்ற 4 பேர் அதாவது மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடா, அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி ஆகிய 4 பேரின் மனுக்களை ஏற்றுக் கொண்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மனுக்களை வாபஸ் பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். யாரும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால், தற்போது களத்தில் உள்ள 4 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. நாளையே அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
Tags:    

Similar News