செய்திகள்
பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்

Published On 2020-06-02 06:30 GMT   |   Update On 2020-06-02 06:30 GMT
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், இந்தியாவை சுயசார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்வதற்கும் தூண்டக்கூடிய 5 முக்கிய அம்சங்களை பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார். விவசாயம்,  தொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை சுயசார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்ய அனைத்து நடவடிக்கைளைளையும் எடுக்க வேண்டும் என தொழில் துறையினருக்கு மோடி கோரிக்கை விடுத்தார்.

‘இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், இந்தியாவை சுயசார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்வதற்கும், ‘நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் புதுமை’ ஆகிய ஐந்து விஷயங்கள் முக்கியமானவை. சமீபத்தில் நாம் எடுத்த தைரியமான முடிவுகளில் இவை பற்றிய ஒரு பார்வை உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் நமது சுரங்கத் துறை, எரிசக்தி துறை அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் இருக்கும். மூன்று மாதங்களுக்குள், இந்தியா தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) உருவாக்கியுள்ளது.  ஒரு நாளில் 3 லட்சம் பிபிஇ கிட்களை உருவாக்கி வருகிறது. ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.53,000 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News