செய்திகள்
கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று

Published On 2020-05-30 10:31 GMT   |   Update On 2020-05-30 10:31 GMT
நாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதிகளில் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

ஆனால் இப்போது அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்பட பல மாநிலங்களில் நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதன்படி நாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதிகளில் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

145 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ்கவுபா ஆலோசனை நடத்தினார். அந்த பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன் சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வருகிறது. அந்த நகர கமி‌ஷனர்கள் மற்றும் கலெக்டர்களையும் ராஜீவ் கவுபா அழைத்து பேசினார். அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News