செய்திகள்
கொரோனா வைரஸ்

பாராளுமன்ற வளாக அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-05-29 07:45 GMT   |   Update On 2020-05-29 07:45 GMT
பாராளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,65,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 175 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71,106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3,414 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகாரிக்கு கொரோனா உறுதியானதால் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள இணைப்பு கட்டத்தின் 2 தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான அதிகாரி மாநிலங்களவையின் செயலகத்தில் பணியாற்றி வருபவர் என தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News